

சாளுக்கிய சோழர்கள்
சாளுக்கிய சோழர்கள் கி.பி 1070களிலிருந்து விஜயாலயச் சோழன் நிறுவிய சோழர் அரசை ஆண்டு வந்தனர். வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசனை சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர்.
சாளுக்கிய சோழர்கள்:
*குலோத்துங்க சோழன் Iகி.பி. 1070-1120
*விக்கிரம சோழன்கி.பி. 1118-1135
*குலோத்துங்க சோழன் IIகி.பி. 1133-1150
*இராசராச சோழன் IIகி.பி. 1146-1163
*இராசாதிராச சோழன் IIகி.பி. 1163-1178
*குலோத்துங்க சோழன் IIIகி.பி. 1178-1218
*இராசராச சோழன் IIIகி.பி. 1216-1256
*இராசேந்திர சோழன் IIIகி.பி. 1246-1279
![]() | ![]() | ![]() |
|---|---|---|
![]() | ![]() | ![]() |
![]() | ![]() |
03







